குளிர்காலமோ, வெயில் காலமோ, காலையில் சீக்கிரம் எழுந்திருக்க சில cool tips இதோ….
அலாரம் வைத்து விழிப்பதற்கு பதிலாக உங்கள் உடலையே உங்கள் அலாரத்தைப் போலாக்குங்கள். இதற்கு தொடர்ந்து 10 நாட்கள் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். இது உங்கள் பாடி க்ளாக்கை செட் செய்யும்.
இரவில் லேசான மற்றும் ஆரோக்கியமனா உணவை உட்கொண்டால், உடல் லேசாக இருக்கும். காலையில் எழுந்திருக்கும்போது சோம்பெறித்தனம் இருக்காது.
படுக்கையில் இருந்து எழுந்தவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் குளிக்கவும். ஏனென்றால், நீர் உடலின் வெப்பநிலையை மாற்றி, நீங்கள் சுறுசுறுப்பாக உணர வைக்கும்.
உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்யுங்கள். இது நாள் முழுவதற்குமான புத்துணர்ச்சியை அளிக்கும்.
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடுப்பது நல்லது. இதனால் உடல் சோர்வில்லாமல், துடிப்பாக இருக்கும்.