கலவரத்தால் கறைபடிந்த குடியரசு தினம்: கட்டுங்கடங்காமல் போன விவசாயிகள் போராட்டம்!!

Tue, 26 Jan 2021-2:50 pm,

கட்டுக்கடங்காமல் போனது விவசாயிகள் போராட்டம். விவேகத்தை இழந்து நடந்துகொண்ட விவசாயிகளால் வன்முறை வெடித்தது, கலவரம் பரவியது.

விவசாயிகள் பேரணிக்காக அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக டெல்லியில் நுழைய முற்பட்ட விவசாயிகள் குழுக்களால் டெல்லியில் பதட்டமான சூழல். 

மத்திய டெல்லியில் உள்ள ஐ.டி.ஓவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று. 

விவசாயிகள் குழு செங்கோட்டையை அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டது. நடக்கும் ஆர்ப்பாட்டங்களைக் கண்டால், செங்கோட்டை மற்றும் மேலும் முக்கிய சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருக்கப் படலாம் என தெரிகிறது

ஐ.டி.ஓவில் விவசாயிகள் - போலீசுக்கு இடையிலான மோதலைத் தொடர்ந்து, விவசாயிகள் குழு செங்கோட்டையை அடைந்தது.

தில்லி காவல்துறை ஊழியர்கள் தாக்கப்பட்ட காவலருக்கு சிகிச்சை அளித்தனர்.  சுயநினைவு அடைந்த பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விவசாயிகளின் போராட்டத்தின் போது, ​​தில்ஷாத் கார்டனில் கடமையில் இருந்த காவல் துறை வீரர் தாக்கப்பட்டார். மயக்கமடைந்த நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மத்திய டெல்லியில் வன்முறை வெடித்ததையடுத்து பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. காவல்துறையினர் விவசாயிகளால் வெடித்த வன்முறையை தடுக்க கடும் முயற்சி எடுக்க வெண்டி இருந்தது. 

மத்திய டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ-வில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் DTC பேருந்துகளை சேதப்படுத்தினர். 

தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக டிராக்டர் அணிவகுப்பு செய்ய முற்பட்ட விவசாயிகளை தடுக்க போலீஸ் அதிகாரிகள் நாங்லோயில் சாலையில் அமர்ந்தார்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link