Fraud alert: Whatsapp Pay மூலம் பாதுகாப்பாக பணம் அனுப்ப 5 முக்கிய tips!!

Sat, 02 Jan 2021-4:33 pm,

எந்தவொரு நுகர்வோருக்கும் எந்த பரிவர்த்தனையின் போதும் வாட்ஸ்அப்பில் இருந்து எந்த வித செய்தியோ அழைப்போ வராது. Whatsapp பிரதிநிதி என்று தங்களை சொல்லிக்கொண்டு யாராவது அழைத்தால், அவரை ஒருபோதும் நம்ப வேண்டாம். உங்களை சிக்க வைக்க இது சைபர் ஏமாற்றுகாரர்களின் ஒரு செயலாக இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

பரிவர்த்தனையின் போது நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், Whatsapp-பிலிருந்து எந்த உதவியும் கிடைக்காது. Whatsapp-க்கு எந்த வாடிக்கையாளர் சேவை மையமும் இந்தியாவில் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் வங்கிகளைதான் தொடர்பு கொள்ள வேண்டும். ஒரு நிறுவனம் அல்லது ஒரு நபர் வாட்ஸ்அப்பின் பிரதிநிதியாக தன்னை காண்பித்துக் கொண்டால், அவரிடம் ஏமாற வேண்டாம்.

தெரியாத எண்ணிலிருந்து பணம் அனுப்பக் கோரி ஏதாவது செய்தி வந்தால், கட்டண பொத்தானை அழுத்துவதற்கு முன்பு அதைப் பற்றி முழுமையாக விசாரணை செய்யுங்கள். கிராஸ் செக் செய்யாமல் பணம் செலுத்தும் பொத்தானை அழுத்தினால், உங்கள் வங்கி கணக்கிலிருக்கு பணம் முழுதும் எடுக்கப்படலாம். எனவே இதுபோன்ற கட்டணக் கோரிக்கைகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் ஒன் டைம் கடவுச்சொல் (OTP) மற்றும் UPI பின் எண்ணை வாட்ஸ்அப்பில் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதுபோன்ற அழைப்புகள் அல்லது செய்திகள் ஏதேனும் வந்தால், உடனடியாக எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு உடனடியாக இதைப் பற்றி எச்சரிக்கவும்.

சைபர் குற்றவாளிகள் Whatsapp-பில் இதுபோன்ற பல போலி இணைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இவற்றை கிளிக் செய்தால் லட்சக்கணக்கில் பணம் வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று நம்பவைக்கப் படுகிறது. ஆனால், இவற்றை கிளிக் செய்தவுடன் உங்கள் ஃபோனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஹேக்கர்கர்கள் ஹேக் செய்து விடுவார்கள். ஆகையால் எப்போதும் சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link