இதை செய்யவில்லை என்றால் 10000 ரூபாய் அபராதம்: Last date நெருங்குகிறது, hurry!!

Thu, 25 Mar 2021-4:17 pm,

ஒருவரின் பான் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், ஒரு வங்கிக்குச் சென்று கணக்கைத் திறப்பதோ அல்லது ரூ .50,000 க்கு மேல் பணத்தை டெபாசிட்  செய்வதோ / எடுப்பதோ செய்ய முடியாது. ஏனெனில் அதற்கு கார்டு தேவைப்படுகிறது. நீங்கள் தவறான அல்லது செயல்படாத பான் அட்டை எண்ணைக் கொடுத்தால் உங்களுக்கு ரூ .10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். விதிமுறைகளின் கீழ், செயல்படாத பான் அட்டை காரணமாக, இதுபோல் ஏற்படும் ஒவ்வொரு இணக்கத்திற்கும் அபராதம் விதிக்கப்படலாம். Photo: PTI

வங்கி கணக்கைத் திறப்பது, மியூசுவல் ஃபண்டுகள் அல்லது பங்குகளை வாங்குவது மற்றும் ரூ .50,000 க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் செய்வது போன்ற பல பணிகளுக்கு பான் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும். இருப்பினும், இதுபோன்ற செயல்படாத பான் கார்டுகள், ஆதார் பான் இணைக்கப்பட்டவுடன் சரியாகிவிடும். ஒரு எளிய எஸ்எம்எஸ் மூலம் இந்த பணியை செய்து விடலாம். Photo: UIDAI

வருமான வரித் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxindiaefiling.gov.in அல்லது நேரடி இணைப்பான www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html-ல் லாக் இன் செய்து பான் - ஆதார் இணைப்பை செய்ய முடியும். இதை செய்வதற்கான வழிமுறையை இங்கே காணலாம்: வருமான வரித் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxindiaefiling.gov.in அல்லது நேரடி இணைப்பான www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html-ல் லாக் இன் செய்யவும்.; ஆதார் கார்டில் உள்ளதைப் போல, பான், ஆதார் மற்றும் பெயரை உள்ளிடவும். கேப்ட்சாவை நிரப்பவும்; மேலும் 'Link Aadhaar' ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதன் பிறகு உங்கள்  பான் ஆதார் இணைப்பு முழுமையடையும். Photo: Reuters

எஸ்.எம்.எஸ் வழியாகவும் பான் ஆதார் இணைப்பை ஒருவர் செய்யலாம். எஸ்எம்எஸ் மூலம் பான் ஆதார் இணைப்பை செய்ய, 567678 அல்லது 56161 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் வடிவம் 'UIDAIPAN(12 டிஜிட் ஆதார் எண்) ஸ்பேஸ் (10 டிஜிட் பான் எண்).' - இப்படி இருக்க வேண்டும். அதாவது ஒருவரது அதார் எண்  ABCDXXXXXXXXXX ஆகவும் மற்றும் பான் கார்டு எண் ABCXXXXXXX ஆகவும் இருந்தால், எஸ்.எம்.எஸ்-ன் வடிவம் "UIDAIPANABCDXXXXXXXXXX ABCXXXXXXX" என இருக்கும். Photo: PTI

இருப்பினும், பான் ஆதார் இணைப்பைச் செய்தவர்களும் அந்த செயல்முறை சரியாக நடந்துவிட்டதா என்பதை உறுதி செய்ய மறந்து விடுகிறார்கள். இதை செய்ய, incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற, வருமான வரித் துறை வலைத்தளத்தின் நேரடி இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு 'View Link Aadhaar Status'. இதற்குப் பிறகு பான் ஆதார் இணைப்பு நிலை கணினி மானிட்டரில் காண்பிக்கப்படும். Photo: Income Tax Website

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link