Germany: பேரழிவை ஏற்படுத்தி வரும் வெள்ளம், பதை பதைக்க வைக்கும் புகைப்படங்கள்

Sun, 18 Jul 2021-3:45 pm,

பெரு வெள்ளத்தில் கொலோனுக்கு அருகிலுள்ள ப்ளூஷெய்மில் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியும், நகரத்தின் பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.  ஆற்றின் கரைகள்  உடைந்து எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளதால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பதற்கான அதிகாரப் பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. கடுமையான வெள்ள நீரின் அழுத்தத்தை நதியால் தாங்க முடியவில்லை, ஆற்றின் கரை உ டைந்துஆற்றின் அருகே ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளம் பெரிதாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மண் அரிப்பு 300 மீட்டர் பரப்பளவில் நகரின் புறநகர்ப்பகுதியை வந்துடைந்துள்ளது

வியாழக்கிழமை இரவு வெள்ளத்திலிருந்து  50 பேர் மீட்கப்பட்டனர்  என அரசு அதிகாரி பிராங்க் ராக் தெரிவித்தார். மேலும், 15 குடியிருப்பாளர்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது, அவர்களை மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து அதிகாரிகளிடம் இன்னும் சரியான தகவல்கள் இல்லை. பேரழிவு நேரத்தில் சிலர் தப்பிக்க முடியாமல், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என கூறினார்.

வெள்ளம் வடிந்த சில பகுதிகளில் இன்னும்  வெள்ள ஆபத்து இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில தசாப்தங்களில் ஜெர்மனியில் ஏற்பட்ட பல வெள்ளங்களில் இந்த ஆண்டு வெள்ளம் மிக மோசமானது. இதன் காரணமாக, இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். நகரங்களும் கிராமங்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள்ன. மொபைல் போன் நெட்வொர்க்குகள் மற்றும் இணைய இணைப்புகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link