PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம் - எப்படி பெறுவது?
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவிடும் வகையில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற PMEGP கடன் (PMEGP Loan) திட்டம் செயல்படுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் வழங்குகிறது.
சிறு வணிகர்களின் நிதிச் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, அவர்கள் கடன் பெறுவதில் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்து மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் கொண்டு வந்தது. இந்தத் திட்டம் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10 லட்சம் வரை எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. இருப்பினும், இதில் விண்ணப்பதாரரே மொத்த திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும்.
PMEGP திட்டத்தின் மற்றொரு ஈர்ப்பு மானியம் ஆகும். திட்ட மதிப்பீட்டில் 15% முதல் 35% வரை அரசு மானியம் வழங்குகிறது. இதன் பலன்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு வழங்கப்படுகிறது. இதனுடன், கடனைத் திருப்பிச் செலுத்த 3 முதல் 7 ஆண்டுகள் காலவகாசம் வழங்கப்படுகிறது.
PMEGP திட்டத்தின் பலன்களைப் பெற, நீங்கள் PMEGP இன் இ-போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் திட்ட அறிக்கை உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ள வணிகர்கள் PMEGP திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம். கடனுக்கு உத்தரவாதம் அவசியமா என்றால், 10 லட்சம் வரையிலான கடனுக்கு உத்தரவாதம் தேவையில்லை.
இந்த திட்டத்தில் கடன் பெறும் சிறு குறு வணிகர்களுக்கு திட்டச் செலவில் 15% முதல் 35% வரை அரசு மானியம் வழங்குகிறது. கடனை திருப்பிச் செலுத்த 3 முதல் 7 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
PMEGP -ன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். PMEGP கடன் திட்டம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்தத் திட்டம் நிதி உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மானியங்கள் மற்றும் வசதியான கடன் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளையும் கொண்டிருக்கிறது.
அதனால், இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று வணிகத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.