Alert: WhatsApp-ல் வைரலாகும் Fake Message; பேராசை பெருநஷ்டம் என போலீஸ் எச்சரிக்கை
நெட்ஃபிக்ஸ், அமேசான் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தை இலவசமாக பயன்படுத்த ஆஃபர் கொடுப்பதாகக் கூறும் செய்தியைக் கிளிக் செய்ய வேண்டாம் என பயனர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.
வாட்ஸ்அப்பில் வரும் அந்த செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் அதனை உடனடியாக நீக்க விட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற பல லிங்குகள் ஆண்டி வைரஸ் இன்ஜின்கள் உதவியுடன் அனுப்பபடுகின்றன். ஆன் லைன் மோசடியை செய்ய நினைப்பவர்கள் மூலம் போலி செய்திகள் அனுப்பப்படுகின்றன என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உங்கள் தரவுகள் திருடப்படுவதோடு, உங்கள் தொலைபேசியும் சேதமடையலாம். அதனால் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த லிங்கை போலீசார் ஏற்கனவே ப்ளாக் செய்துள்ளனர்.
இந்த வகை செய்திகளை கவனமாக வாசித்தால், இந்த போலி செய்திகளில், அமேசான் பிரைமுக்கு பதிலாக அமேசான் பிரீமியம் என்று எழுதப்பட்டிருப்பதை அடையாளம் காணலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, நமது தொலைபேசிக்கு இலவசம் என வரும் தகவல்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பேராசை பெரு நஷ்டத்தில் முடிவதோடு, பல வித இன்னல்களையும் சந்திஒக்க நேரிடலாம்.