பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!

Sun, 22 Dec 2024-8:26 am,

சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் விடுதியில், தனியார் மருத்துவமனையின் ஆஸ்துமா கிளினிக் திறக்கப்பட்டது குறித்த நிகழ்வு நேற்று (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் (Radhakrishnan IAS) கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,"37 ஆயிரம் நியாயவிலை கடைகள் (Ration Shops) தமிழ்நாட்டில் உள்ளன. கூட்டுறவு மற்றும் உணவு நமது இரு கண்கள்" என்றார்.

மேலும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் என்ற ஒன்றிய அரசு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துகிறோம் என தெரிவித்த அவர் இதுவரை 1.14 கோடி பேர் அதில் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதை தவிர்த்து 1.04 கோடி பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை கொடுக்கிறோம் என்றும் அவர் கூறினார். அரிசி 3 மாதத்திற்கு தேவையான இருப்பு உள்ளது என்றும் அதே போல் பருப்பும் தயார் நிலையில் உள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார். 

2.25 ரேஷன் கார்டுகள் இருப்பதாகவும் தற்போது 1.54 புதிய கார்டுகள் (New Ration Cards) வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கடைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

நியாயவிலைக் கடையில் பச்சரிசி கிடைக்கவில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பச்சரியை தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுப்போம். பொங்கல் நேரத்தில் பச்சரிசி தேவை அதிகம் உள்ளது" என்றார்.  

 

மேலும், கோதுமை பொருத்தவரை மத்திய அரசை சந்தித்து விளக்கிய பிற்கு 7100 மெட்ரிக் டன்னுக்கு பதிலாக 17,100 டன் கோதுமை தற்போது கொடுக்கிறார்கள் என்றார்.

பொங்கல் சிறப்பு தொகுப்பு (Pongal Special Gift Pack 2025) குறித்த அறிவிப்பை முதல்வர் வரும் வாரத்தில் வெளியிடுவார் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்றார். மேலும், வேளாண்துறையுடன் இணைந்து கரும்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கவும் ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தகவல் அளித்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link