ஐஸ்வர்யாவிற்கு கேக் ஊட்டிய விக்ரம்..மும்பையில் பொன்னியின் செல்வன் படக்குழு
சில நாட்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக வசூலை குவித்து வரும் படம் பொன்னியின் செல்வன் 2.
வெளியான சில நாட்களிலேயே, இப்படம் வசூலில் 200 கோடியை மிஞ்சி விட்டது.
பொன்னியின் செல்வன் படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட மொழிகளில் வெளியானது.
தமிழ் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இப்படத்தின் ப்ரத்யேக காட்சி நேற்று நடைப்பெற்றது. இதில், பாலிவுட்டின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னியின் செல்வன் 2 படக்குழு மும்பையில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை லைகா நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.