போஸ்ட் ஆபிசின் வருமான திட்டம்: 5 ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்க டிப்ஸ்!
மாதாந்திர வருமான திட்டத்தை தொடங்க ஒரு நபர் அதிகபட்சமாக கணக்கில் ரூ.4.50 லட்சம் மற்றும் கூட்டு கணக்கில் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்து திட்டத்தை தொடங்கலாம்.
10 வயதுக்குட்பட்டவர்கள் பாதுகாவலருடன் கணக்கை தொடங்கலாம் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தனது சொந்த பெயரிலேய கணக்கை தொடங்கலாம்.
5 ஆண்டுக்கு பின் கணக்கு முதிர்ச்சியடைந்ததும் தபால் நிலையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பாஸ்புக்குடன் கொடுத்து பணத்தை பெற்று கொள்ளலாம்.
கணக்குதாரர் இறந்துவிட்டால் அவரது கணக்கு மூடப்பட்டு அவரது சட்டபூர்வமான நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும்.
போஸ்ட் ஆபீஸ் ஆர்டிக்கு 5,8% வட்டி வழங்குகிறது, இந்த திட்டத்தின் முதிர்வில் முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் சேர்த்து ஆர்டி பணமும் கிடைக்கிறது.