மூத்த குடிமக்களுக்கான சூப்பர் ஹிட் திட்டம்: தபால் நிலைய திட்டத்தில் பம்பர் லாபம்!!

Fri, 10 Sep 2021-8:05 pm,

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) கணக்கு தொடங்க உங்கள் வயது வரம்பு 60 ஆக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். இது தவிர, VRS, அதாவது விருப்ப ஓய்வு எடுத்தவர்களும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கலாம்.

மூத்த குடிமக்கள் திட்டத்தில் மொத்தமாக ரூ .10 லட்சம் முதலீடு செய்தால், பிறகு ஆண்டுக்கு 7.4 சதவிகிதம் (கூட்டு) வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர்களுக்கான மொத்த தொகை ரூ .14, 28,964, அதாவது ரூ .14 லட்சத்திற்கு மேல் கிடைக்கும். இங்கே வாடிக்கையாளர்களுக்கு வட்டியின் வடிவத்தில் ரூ .4,28,964 மதிப்பிலான் பலன் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் ஒரு கணக்கைத் தொடங்க தேவைப்படும் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். இது தவிர, நீங்கள் இந்தக் கணக்கில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வைத்திருக்க முடியாது. இது தவிர, உங்கள் கணக்கு திறக்கும் தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், நீங்கள் ரொக்கமாக பணம் செலுத்தியும் கணக்கைத் திறக்கலாம். ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்தி கணக்கைத் துவங்க, நீங்கள் காசோலையை செலுத்த வேண்டும்.

வரி விலக்கு பற்றி பேசுகையில், SCSS இன் கீழ் உங்கள் வட்டி தொகை ஆண்டுக்கு ரூ. 10,000 ஐ தாண்டினால், உங்கள் TDS கழித்தல் தொடங்கப்படும். இருப்பினும், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி -யின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

SCSS இன் முதிர்வு காலம் (Maturity Period) 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் முதலீட்டாளர் விரும்பினால் இந்த கால வரம்பையும் நீட்டிக்க முடியும். இந்தியா போஸ்ட் இணையதளத்தின்படி, இந்த திட்டத்தை, மெச்யூரிட்டிக்குப் பிறகு 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இதை அதிகரிக்க, நீங்கள் தபால் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SCSS இன் கீழ், ஒரு டெபாசிட்டர் தனித்தனியாக அல்லது அவரது மனைவியுடன் கூட்டாக ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்க முடியும். ஆனால் அனைத்தும் சேர்ந்து அதிகபட்ச முதலீட்டு வரம்பு 15 லட்சத்தை தாண்டக்கூடாது. கணக்கு தொடங்கும் மற்றும் மூடப்படும் நேரத்தில் நாமினேஷன் வசதி உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link