சலார் படத்தில் நடிக்கும் ராக்கி பாய்? டீஸரில் இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?

Thu, 06 Jul 2023-2:08 pm,

அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

 

அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்திய திரைப்படம் என்ற சாதனைகளை முறியடிக்கும் வகையில் உள்ளது. இதுவே வெற்றிக்கான தொடக்கம் என்பதனையும் எடுத்துரைக்கிறது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சலார்: இதுவரை இந்தியாவில் தயாரான திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படங்களில் 'சலார் பகுதி 1' முன்னிலையில் இருக்கிறது. 

 

மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'கே ஜி எஃப்' படத்திற்குப் பிறகு அதன் அதிரடி இயக்குநர் பிரசாந்த் நீலிடமிருந்து தயாராகி இருக்கும் மற்றொரு படைப்பு. 

 

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் சலார் பகுதி 1: சீஸ் ஃபயர் எனும் இந்த படத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ் சுகுமாறன்., ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link