இளநரையால் பிரச்சனையா? இவை முக்கிய காரணங்களாக இருக்கலாம்
சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு காரணம் மரபியல். இந்த வெள்ளை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லை. ஏனெனில், அது உங்கள் ஜீன்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெற்றோருக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள யாருக்காவதோ சிறுவயதில் இந்த பிரச்சனை இருந்திருந்தால், அது மரபு வழியில் உங்களுக்கும் சிறு வயதிலேயே நரை முடி பிரச்சனையை உருவாக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பல வித பதற்றங்கள், டென்ஷன் இருக்கும். இந்த மன அழுத்தம் அதிகமாகும் போது தூக்கமின்மை, பதட்டம், பசியின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதே நேரத்தில், மன அழுத்தம் முடியின் வேர்களில் இருக்கும் ஸ்டெம் செல்களை வலுவிழக்கச் செய்யத் தொடங்குகிறது. இதன் காரணமாக முடி வெண்மையாக மாறத் தொடங்குகிறது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.
சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு ஆட்டோ இம்யூன் நோய்களும் காரணமாக இருக்கலாம். முடி நரைக்க காரணமாக இருக்கும் தன்னுடல் தாக்க நோய்களின் பெயர்கள் அலோபீசியா அல்லது விட்டிலிகோ ஆகும். இந்த நோய்களில், நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த செல்களை சேதப்படுத்தத் தொடங்குகிறது. இதன் காரணமாக சிறு வயதிலேயே முடி நரைக்கத் தொடங்குகிறது.
சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு வைட்டமின் குறைபாடும் காரணமாக இருக்கலாம். உடலில் வைட்டமின் பி-12 குறைபாடு இருந்தால், முடி சேதமடையத் தொடங்கும். இந்த வைட்டமின் ஆற்றல் அளிக்கவும், முடி வளர்ச்சி மற்றும் முடி நிறத்தை கட்டுப்படுத்தவும் காரணமாக இருக்கிறது.
புகைபிடித்தல் உங்கள் தலைமுடியை இளவயதிலேயே வெள்ளையாக்கும் என பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புகைபிடித்தல் நரம்புகளை சுருங்கச் செய்து அவற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதன் காரணமாக முடியின் வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல், அவை வெண்மையாக மாற ஆரம்பிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)