சனி வக்ர நிவர்த்தி... கார்த்திகையில் பிரச்சனைகளை சந்திக்க போகும் சில ராசிகள்
சனி பெயர்ச்சி: ஜோதிடத்தில், கர்மாவிற்கு ஏற்ற பலனைக் கொடுக்கும் சனீஸ்வரர் நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு கும்பத்தில் சனி பெயர்ச்சி ஆன நிலையில், கடந்த 2024 ஜூன் 29ம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்தார்.
சனி வக்ர நிவர்த்தி: சனி பகவான், நவம்பர் 15ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைவார். சனியின் வக்ர நிவர்த்தியினால், குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெரிதும் கை கொடுக்கும். என்றாலும், இதனால், சில ராசிகள் கார்த்திகையில் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
சனி பகவான்: கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, குறிப்பிட்ட கோள்களின் ஆற்றல் அபரிமிதமாக இருக்கும் என்பதால், சாதாரண நிலையில் இருப்பதை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். இதனால், கெடு பலன்கள், சுப பலன்கள் இரண்டுமே அளவிற்கு அதிகமாக இருக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தியினால் மன ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. வீட்டில் யாருடனும் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் உறவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தியினால், வாழ்க்கையில் சிரமங்களை அதிகரிக்கும். நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். கணவன்-மனைவி இடையே கணவன்-மனைவி இடையே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படலாம். உங்கள் உறவைக் காப்பாற்ற, நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மீன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி வாழ்க்கையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். சனியின் சஞ்சாரம் உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். எதிலும் வெற்றி எளிதில் கிடைக்காது. குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை. இல்லை என்றால், வீட்டில் அமைதி இருக்காது.
சனி பரிகாரங்கள்: சனி பகவானின் அருளை பெற ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். அதோடு, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளாறு பதிகம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். சனிக்கிழமைகளின் சனி பகவானின் கோவிலுக்கு சென்று வணங்குவது விசேஷம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.