உடல் பருமன் பிரச்சனையை தூள் தூளாக்கும் பூசணி விதை தூள்: கண்டிப்பா சாப்பிடுங்க
உடல் எடை அதிகரிப்பு இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள், பலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள். எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூசணி விதைகளில் பல வித ஆரோக்கிய நன்மைகள் இருப்பதோடு இவை எடை குறைப்பிலும் உதவுகின்றன. இதை நமது உணவில் பல வழிகளில் சேர்க்கலாம் என்றாலும், இதற்கு ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழி தூள் அதாவது பொடி வடிவில் பூசணி விதைகளை பயன்படுத்துவது ஆகும்.
பூசணி விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உணவில் ஊட்டச்சத்து நிறைவை அளிக்கின்றன. இந்த பொருட்கள் திருப்தி உணர்வை அளித்து வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவுகின்றன. எடை இழக்க அல்லது குறைக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது.
பூசணி விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து திருப்தி உணர்வை ஊக்குவிக்க உதவுகிறது, இதன் மூலம் மொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது. நீங்கள் திருப்தியாக உணரும்போது, ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இதனால் உங்கள் எடை இழப்பு இலக்குகளை எளிதாக அடையலாம்.
பூசணி விதைகளில் மெக்னீசியம் உள்ளது, இது வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. கலோரிகளை திறம்பட எரிக்க, ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும், நன்கு செயல்படும் வளர்சிதை மாற்றம் அவசியம். உங்கள் உணவில் பூசணி விதை தூள் சேர்த்து இந்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க முடியும்.
நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது பசியைக் கட்டுப்படுத்துவதற்கும் அதிகப்படியான உணவைத் தடுப்பதற்கும் முக்கியமாகும். பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் கலவையானது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது.
ஸ்மூத்தி, தயிர் அல்லது ஓட்மீல் டாப்பிங், சாலடுகள், பேக்கிங் ஆகியவற்றில் பூசணி விதை பொடியை சேர்க்கலாம். இது உணவுகளின் ருசியை சேர்ப்பதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.