போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு! அரசு வேலை அறிவித்த பஞ்சாப் முதல்வர்

Fri, 23 Feb 2024-11:06 am,

விவசாயிகளின் போராட்டத்தினால் வட இந்திய மாநிலங்களில் நிலைமை பதற்றமாக உள்ள நிலையில், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சுப்கரன் சிங் என்ற 21 வயது விவசாயி ஒருவர் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது

இரு தரப்புக்குமான தள்ளு முள்ளுவில் காவல்துறையினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 30 போலீசார் காயம் அடைந்தனர். விவசாயி இறந்ததை அடுத்து, டெல்லி சலோ போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். 

இந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநில விவசாயியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவத் மான் சிங், விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவித்துள்ளார்

விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த விவசாயியின் பிரேத பரிசோதனைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அவரது மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பகவத் மான் உறுதியளித்தார்

அரசியல் சாராத சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியவை 'டெல்லி சலோ' அணிவகுப்பை முன்னெடுத்தன. பயிர்களுக்கு MSP சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று விவசாயிகள் அரசிடம் கேட்கின்றனர்  

போராட்டங்களுக்கு மத்தியில், இன்று கருப்பு வெள்ளி என்று சோக தினமாக அனுசரிக்கப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாத் அறிவித்ததை அடுத்து, தலைநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link