புரட்டாசி வியாழக்கிழமை: இன்று இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.
இன்று செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் உயர்கல்வி சார்த்த ஆலோசனைகள் கிடைக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் அஸ்வினி : விவேகம் வேண்டும். பரணி : மகிழ்ச்சியான நாள். கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
இன்று மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் கிருத்திகை : கவனம் வேண்டும். ரோகிணி : புரிதல்கள் உண்டாகும். மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
இன்று வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பூர்வீகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
இன்று பயணம் தொடர்பான செயல்களில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனை வாங்குதல் மற்றும் விற்றல் பணிகளில் மேன்மை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நன்மை உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம் புனர்பூசம் : அனுபவம் ஏற்படும். பூசம் : மேன்மை உண்டாகும். ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.
இன்று கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் வேண்டும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். திறமைக்கேற்ப வாய்ப்புகள் அமையும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம் மகம் : ஒற்றுமை அதிகரிக்கும். பூரம் : கவனம் வேண்டும். உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
இன்று பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் பிறக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் உத்திரம் : மாற்றங்கள் பிறக்கும். அஸ்தம் : உதவிகள் கிடைக்கும். சித்திரை : மரியாதை மேம்படும்.
துலாம் இன்று பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் சித்திரை : மாற்றம் உண்டாகும். சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும். விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
இன்று குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் விசாகம் : அலைச்சல் மேம்படும். அனுஷம் : முதலீடுகள் அதிகரிக்கும். கேட்டை : எதிர்ப்புகள் குறையும்.
இன்று சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சாப்பாடு விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். திடீர் செய்திகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மேலதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீரும். வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையில்லாத அலைச்சல் மூலம் சோர்வு உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் மூலம் : அனுகூலம் ஏற்படும். பூராடம் : நெருக்கடிகள் மறையும். உத்திராடம் : சோர்வுகள் உண்டாகும்.
இன்று பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் உத்திராடம் : நிதானம் வேண்டும். திருவோணம் : வாதங்களை தவிர்க்கவும். அவிட்டம் : லாபங்கள் கிடைக்கும்.
இன்று வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகளும், ஒத்துழைப்பும் உண்டாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் அவிட்டம் : உதவிகள் கிடைக்கும். சதயம் : ஒத்துழைப்பு மேம்படும். பூரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
இன்று உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும். உத்திரட்டாதி : அனுபவம் வெளிப்படும். ரேவதி : சாதகமான நாள்.