மது அருந்துவதை நிறுத்தினால் வரும் பக்கவிளைவுகள்! இதுக்கு தான் குடிமகன்கள் பயப்படறாங்களோ?

Sat, 20 Jan 2024-7:23 am,

மது அருந்துவதைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல முடிவாக இருக்கும். ஆனால், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதைக் கைவிடுவது கடினமாக இருக்கலாம், மேலும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இதுதான் குடிப்பதை கைவிட மறுக்கும் காரணங்களில் முக்கியமானவைகாக கருதப்படுகிறது.

மது அருந்துவது ஒருபோதும் உடல்நலத்தை மேம்படுத்தாது என்பது தெரிந்தாலும், அந்தப் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டு அதற்கு அடிமையானால் ஏற்படும் பிரச்சனைகள் ஒருபுறம் என்றால், அதை விடுவதால் ஏற்படும் பிரச்சனைகளும் பயமுறுத்துவதால், குடிப்பழக்கத்தை தொடங்காமல் இருப்பதே நல்லது

மது அருந்துவதை நிறுத்திய பிறகு தலைவலி பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அத்துடன் வலி தாங்க முடியாத அளவுக்கு கடுமையாகவும் இருக்கலாம். 

மலச்சிக்கல் மதுவை விட்ட பிறகு வயிறு தொடர்பான பிரச்சனைகளும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் அதிகமாகும்  

மனச்சோர்வு திடீரென்று மது அருந்துவதை விட்டுவிடுவது மனச்சோர்வு போன்ற சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மது அருந்த வேண்டும் என்ற விருப்பம் அடிக்கடி எழுவதும், அதைக் கட்டுப்படுத்துவதும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இதனால் அவர் எரிச்சல், சோகம் என உணர்வுகள் மாறி மாறி வரும்

குடிப்பதை முழுமையாக நிறுத்தினால், பசியின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். உணவு உட்கொள்ளும் அளவு குறையும்போது, பிற பிரச்சனைகளுடன் சேர்ந்து உடல் எடையும் சட்டென்று குறையும்

கவனம் செலுத்த இயலாமை மதுவை விட்ட பிறகு, கவலை மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர, வேலையில் கவனம் செலுத்த இயலாமை மற்றும் விரைவான இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகளையும் காணலாம். மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் போகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link