ராகு கேது தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்....See Photos

Sat, 01 Aug 2020-3:48 pm,

சிதம்பரம் நடராஜர் ஆலயம், சிவகாமசுந்தரியின் சந்நிதியில் உள்ள சித்திரகுப்தரை திங்கட்கிழமை எமகண்ட வேளையில் வணங்கினால் கேது தோஷம் நீங்கும்.

 

நாகர்கோவில், நாகநாதர் ஆலயத்தில் மூலவரே நாகர்தான். இங்குள்ள இரண்டு அரச மரங்களை வலம் வந்து நாகராஜனையும், நாகராணி என்ற துர்க்கையையும் வழிபட, ராகு-கேது தோஷங்கள் நீங்குகின்றன.

திருநெல்வேலியில் கார்க்கோடகன் என்று அழைக்கப்படும் ராகு-கேது தலம் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் ராகு-கேது அம்சமாகத் திகழ்கிறார். இவருக்கு அமிர்தகலசம் செய்து நிவேதித்தால் ராகு-கேது தோஷங்கள் நீங்கும்.

 

நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயம். இங்கு அருளும் கோமதியம்மன் சந்நிதியின் புற்றுமண் தீரா நோய் தீர்க்கும் மாமருந்து. வீடுகளில் விஷ பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியினாலான பாம்பு, தேள் போன்ற உருவங்களை உண்டியலில் செலுத்துகிறார்கள். இவ்வாறு செலுத்தினால் நாகதோஷம் நீங்கப்பெறுவர்.

ராமநாதபுரம், பரமக்குடியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது நயினார் கோயில். இங்குள்ள இறைவன் -நாகநாதர். ஆதிசேஷனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட மூர்த்தி இவர். ராகு-கேது தோஷங்கள் நீங்க இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் தோஷங்கள் நீங்குகின்றன.

ஆலப்புழா, ஹரிபாத நகரிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது மன்னார்சாலை. இங்கு நாகராஜர் பாதாள அறை ஒன்றில் வீற்றிருக்கிறார். ராகு கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆய்ல்ய நட்சத்திர தினத்தன்று, இங்கு வந்து முறையான வழிபாடு நடத்தினால் கேது தோஷங்கள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும் என்கிறார்கள்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link