மழையால் குளம் குட்டைகளாக மாறிய சாலைகள்: தத்தளிக்கும் தலைநகரம்
பெங்களூருவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகரின் கேந்திரிய விஹார் அபார்ட்மென்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை முதல்வர் பொம்மை பார்வையிட்டார். கேந்திரிய விஹாரில் என்.டி.ஆர்.எஃப் மீட்புப் பணியினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். (Photo Credits: PTI)
பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க மாநில அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதால், என்.டி.ஆர்.எஃப் நிதி மூலம் அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Photo Credits: PTI)
கனமழையைத் தொடர்ந்து, யெலஹங்கா ஏரி நிரம்பி, கேந்திரிய விஹார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கர்நாடகா மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் நவம்பர் மாதத்தில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. (Photo Credits: PTI)
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 5 லட்ச ரூபாயும், பாதி சேதமடைந்த வீடுகளுக்கு 3 லட்ச ரூபாயும் இழப்பீடாக 3 தவணைகளில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். (Photo Credits: PTI)
அடுத்த ஐந்து நாட்களுக்கு கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. (Photo Credits: PTI)