தமிழகம் முழுக்க பரவலான மழை! இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!
இந்தியா முழுக்க வெயில் வாட்டிவதைத்த நிலையில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
இந்த சமயத்தில் நாம் சாப்பிடும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் நோய்கள் எளிதில் தாக்க அதிக வாய்ப்புள்ளது.
பால், தயிர் மற்றும் பன்னீர் போன்ற பால் பொருட்கள் ஈரப்பதமான நேரங்களில் எளிதில் கெட்டுவிடும். எனவே இந்த உணவுகளை சாப்பிடும் முன்பு கவனத்துடன் இருக்க வேண்டும்.
மழை பெய்யும் நேரத்தில் கடல் உணவுகள் எளிதில் மாசுபடலாம். எனவே இந்த காலத்தில் மீன், இறால் மற்றும் பிற கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பழக்கடைகளில் பழங்கள் வாங்கும் போது கவனமுடன் வாங்க வேண்டும். சில சமயங்களில் பழங்கள் அழுகி போக வாய்ப்புள்ளது. மேலும் சரியாக சுத்தப்படுத்தாமல் இருந்தால் நோய்கள் வரலாம்.
மழைக்காலத்தில் தெரு ஒரே உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பானி பூரி, சமோசா போன்ற சாட் உணவுகள் மூலம் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது.
கீரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளில் அதிக ஈரப்பதம் இருக்கும். எனவே இதனை மழை காலங்களில் சாப்பிட வேண்டாம். செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.