ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!

Sun, 26 May 2024-5:02 pm,

நடப்பு ஐபிஎல் தொடரின் இடையில் நீங்கள் யாரிடமாவது எந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது என கேட்டிருந்தால், நிச்சயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைதான் அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

 

ஆம், அந்த அணி விளையாடிய முதல் 9 லீக் போட்டிகளில் 8இல் வெற்றி பெற்று உச்சத்தில் இருந்தது. அதன்பின் ஏற்பட்ட சறுக்கல் அந்த அணியை தற்போது குவாலிஃபயர் 2 போட்டியோடு வெளியேற்றிருக்கிறது.

 

கடந்த 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  அஸ்வின், சஹால், போல்ட், ஹெட்மயர், ரியான் பராக் ஆகியோரை வாங்கியது. அந்த அணி அதற்கு முன் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை தக்கவைத்திருந்தது.

 

அந்த வகையில், வரும் ஐபிஎல் 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்களை இங்கு காணலாம். 

 

ரவிசந்திரன் அஸ்வின்: இவரின் பார்மில் எவ்வித கேள்வியும் இல்லை, குறையும் இல்லை. எனினும் மெகா ஏலத்தில் இவரை ராஜஸ்தான் அணியால் தக்கவைக்க இயலாது. அஸ்வினை யாரும் அடுத்த சீசனில் சீண்டக்கூட மாட்டார்கள் என மூத்த வீரர் சேவாக் தெரிவித்திருந்திருந்தார். ஆனால், விடுவித்தாலும் ராஜஸ்தான் அஸ்வினை மீண்டும் எடுக்க முயற்சிக்கலாம்.

 

யுஸ்வேந்திர சஹால்: பெங்களூரு அணி இவரை விடுவித்ததே பெரிய தவறு என இப்போதும் பலரும் சொல்லி வரும் வேளையில் ராஜஸ்தான் அணியும் இவரை இப்போது விடுவிக்கத் தான் உள்ளது. இருப்பினும் மீண்டும் அணியில் எடுக்க ராஜஸ்தான் போராடும். 

 

டிரன்ட் போல்ட்: ஒரே ஒரு வெளிநாட்டு வீரரைதான் ராஜஸ்தான் தக்கவைக்கும் என்பதால் போல்ட்டை ராஜஸ்தான் அணி விடுவிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

 

ஷிம்ரோன் ஹெட்மயர்: ஜாஸ் பட்லரை மீண்டும் ராஜஸ்தான் அணி தக்கவைத்தால் ஷிம்ரோன் ஹெட்மயர் நிச்சயம் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

 

துருவ் ஜூரேல்: மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கும் இந்த இளம் வீரரை வளர்த்தெடுத்த பெருமை ராஜஸ்தான் அணியையே சேரும். இருப்பினும், சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகிய மூன்று வீரர்களை தாண்டி துருவ் ஜூரேலை ராஜஸ்தான் தக்கவைக்க இயலாது என்பதால் இவரை விடுவிக்கவே அதிக வாய்ப்புள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link