வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?

Thu, 24 Oct 2024-8:29 am,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்போது ஓடிடி தளத்தில் வெளியாக தயாராக உள்ளது.

 

அமேசான் பிரைம் வீடியோ வேட்டையனின் டிஜிட்டல் உரிமையை ரூ. 90 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

தீபாவளிக்கு படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் கழித்து நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் படம் வெளியாக உள்ளது. 

 

இது குறித்து இன்னும் அமேசான் தரப்பில் இருந்து எந்தஒரு அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இன்னும் சில திரையரங்குகளில் படம் ஓடி கொண்டிருக்கிறது.

 

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

எந்திரன் 2.0, தர்பார்,லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவான வேட்டையன் படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link