ரஜினிகாந்தின் நிகர மதிப்பு! சென்னையில் மட்டுமே இத்தனை சொத்துக்களா?
![ரஜினி rajinikanth](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/04/18/387476-rajini-1.jpg?im=FitAndFill=(500,286))
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல் அதிகம் சம்பளம் பெரும் நடிகராகவும் இருந்து வருகிறார்.
![rajinikanth ரஜினி](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/04/18/387475-rajini-6.jpg?im=FitAndFill=(500,286))
ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார் ரஜினிகாந்த். அதே போல, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
![ரஜினி rajinikanth](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/04/18/387474-rajini-5.jpg?im=FitAndFill=(500,286))
ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி முதல் ரூ.210 கோடி வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு ரூ.110 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. ரஜினிக்கு சென்னையில் ஆடம்பர வீடு மற்றும் கல்யாண மண்டபம் உள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ரஜினியினிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், BMW X5, Mercedes-Benz G Wagon, Lamborghini Urus மற்றும் Bentley Limousine ஆகிய சொகுசு கார்கள் வைத்துள்ளார்.