திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு சென்ற பிரபலங்களுடன் ரஜினி `அண்ணாத்த`
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்கிறார். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர் என்ற சிறந்த நடிகர் மற்றும் வெற்றிகரமான அரசியல்வாதியுடன்...
அற்புதமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் ஈர்த்து, வெற்றி பெற்ற அரசியல்வாதியாய் உலா வந்து, தனது பெயரையே ‘அம்மா’ என்று அனைவரையும் சொல்ல வைத்த இரும்புப் பெண்மணி ஜெ.ஜெயலலிதாவுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்த மறைந்த பத்திரிகையாளர் சோ அவர்களை அரசியல்வாதி என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியுமா என்றால் முடியாது.
தசாவதாரமாய் பிரம்மாண்டம் காட்டும் சூப்பர் கலைஞருடன், அவருக்கே வில்லனாய் நடித்து கதாநாயகனாய் உருவெடுத்த ரஜினிகாந்த்
பழம்பெரும் நடிகை என்று சொல்லிவிட முடியாத அற்புதமான நடிகை ஹேமாமாலினியுடன் ரஜினிகாந்த்
அண்ணாமலையில் கலக்கிய குஷ்புவுடன் ரஜினிகாந்த்
கலைஞர் என்றே அழைக்கப்படும் கருணாநிதி, வசனங்களுக்கும், திரைக்கதைக்கும் பெயர் பெற்ற எழுத்தாளர், தனது எழுத்துத் திறமையால் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் சூப்பர் ஸ்டார்
மன்னனில் இணையாய் கலக்கிய விஜயசாந்தியுடன் ரஜினிகாந்த்
வில்லனாய் அறிமுகமாகி கதாநாயகனாய் இன்றும் கோலோச்சும் சரத்குமாருடன் சூப்பர் ஸ்டார்
காந்த் என்ற இறுதிப் பெயரைக் கொண்ட ரஜினிகாந்தும், விஜயகாந்தும்...
பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சனுக்கு தம்பியாக நடித்த ரஜினியை அமிதாப் என்றுமே சகோதரனாகவே கருதுகிறார்
அழகான ஜெயப்பிரதாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்