58 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பெருங்கடலில் கட்டமைக்கப்பட்ட பாம்பன் பாலம்

Wed, 01 Jun 2022-9:08 am,

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையே மீண்டும் பாம்பன் பாலத்தை அமைக்கும் பணியை இந்திய ரயில்வே 58 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொண்டிருக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், டிசம்பர் 1964 வரை, தனுஷ்கோடி ஒரு பிரபலமான ரயில் நிலையமாக இருந்தது, சுனாமி முழு பாலத்தையும் அழித்துவிட்டது.

தனுஷ்கோடி நிலையம் இலங்கையில் உள்ள சிலோனுக்கும் இந்தியாவில் உள்ள மண்டபத்திற்கும் இடையே ஒரு முக்கியமான தொடர்பு புள்ளியாக இருந்து வந்தது, அப்போது Boat Mail என்ற ரயில் சேவையும் இயங்கியது குறிப்பிடத்தக்கது

700 கோடி செலவில் புதிய பாலத்தின் கட்டுமானப் புதுப்பிப்பை ஹைலைட் செய்யும் படங்களை இந்திய ரயில்வே இப்போது பகிர்ந்துள்ளது.

புதிய முன்மொழிவின் கீழ், 18 கிலோமீட்டர் தொலைவுக்கு இருப்புப்பாதை அமைக்கப்படும். தரையில் இருந்து 13 கிலோமீட்டர் உயரத்தில் இந்த பாதை அமைக்கப்படுகிறது.

1964 சுனாமியின் போது, ரயில் ஊழியர்களுடன் நூற்றுக்கணக்கான பயணிகளும் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, தனுஷ்கோடிக்கான ரயில் பாதையை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படவில்லை.

புவியியல் ரீதியாக, தனுஷ்கோடி பாம்பன் தீவின் முனையில் உள்ளது, இது பாக் ஜலசந்தியால் தமிழ்நாட்டின் பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link