In pics: 250 கோடி செலவில் தாயாராகி வரும் `பாம்பன் பாலம்`
பாம்பன் ரயில்வே பாலத்தின் படங்களை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை பகிர்ந்துள்ளார். இது இந்தியாவின் செங்குத்தாக திறக்கும் முதல் கடல் பாலம், இது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பயன்பாட்டிற்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, பயணிகள், மிகப்பெரிய அளவில் பயன் பெறுவார்கள். தெற்கு ரயில்வே ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்களை இயக்கும் நிலையில், பயணிகள் பலன் பெறு வகையில். பாம்பன் பாலம் ரூ .250 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
பாம்பன் ரயில் பாலம் ரயில்வே மேம்பாட்டுக் கழகம் மூலம் 2.07 கிமீ நீளத்துடன், கட்டபடும் இந்த பாலம் மூலம் மக்களுக்கு மேலும் பல வசதிகளை வழங்க இயலும். இந்த பாலத்தின் அதிக எடை தாங்க வல்லது.
பாம்பன் பாலம் முடிந்த பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோவில் மற்றும் ஜோதிர்லிங்கத்திற்கு வருகிறார்கள். பாலத்தின் வசதியுடன், அத்தகைய பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.
பாம்பன் ரயில்வேயின் பழைய பாலம் 1914 இல் கட்டப்பட்டது ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் இந்தப் பழைய பாலம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ராமேஸ்வரை இணைக்கும் ஒரே பாலம் இதுதான், ஆனால் 1988 இல் அதற்கு இணையாக சாலை வழியிலான பாலமும் கட்டப்பட்டது.