மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் விஜய் ஹீரோயின்
புஷ்பா ஹிட்டுக்கு பிறகு தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு பறந்த ராஷ்மிகா மந்தனா, இப்போது விஜய்யுடன் சேர்ந்து வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் தொடர்ந்து பிஸியாகவே கடந்த சில மாதங்களாக நடித்து வந்தார். இப்போது கொஞ்சம் பிரேக் தேவை என நினைத்த அவர், உடனடியாக மாலத்தீவுக்கு விசிட் அடித்துவிட்டார்.
அங்கு சுற்றுலா போனதும் போதும், ரசிகர்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களாக சோஷியல் மீடியாவில் இறக்கி வருகிறார்.
இதில் இன்னொரு தகவலும் கிசுகிசுக்கப்படுகிறது. ராஷ்மிகாவின் காதலர் என கூறப்படும் விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவில் தான் இருக்கிறார்.
இருவரும் ஒன்றாக தான் அங்கு நேரத்தை செலவிட்டு, விடுமுறையை என்ஜாய் செய்வதாக சினிமா வட்டார டிராக்கர்கள் கொளுத்தி போட்டுள்ளனர்.
ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.