Rasipalan 12 August: இன்றைய ராசிபலன் என்ன சொல்கிறது?

Thu, 12 Aug 2021-6:10 am,

மேஷம்: மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபார வளர்ச்சிக்கான உதவிகளும், ஆலோசனைகளும் கிடைக்கும்.

ரிஷபம்: கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு ஏற்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்: உடலளவிலும், மனதளவிலும் புதுவிதமான பொலிவுடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: வியாபாரம் தொடர்பான பொருளாதார நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்: ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். திறமைக்கேற்ற உயர்வுகள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். கால்நடைகளின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும்.

கன்னி: தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது நல்லது. நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உங்களின் மீது அவ்வப்போது சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்: சுபகாரியங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தெய்வீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வகையில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் நட்புகள் மற்றும் அறிமுகங்கள் ஏற்படும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

விருச்சிகம்: பங்காளி வகை உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளினால் சரியான முடிவினை எடுக்க முடியாமல் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் மீது உங்களது எண்ணங்களை திணிப்பதை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகளை அளிப்பதில் சிந்தித்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும்.

 

தனுசு: குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

மகரம்: உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவும், அன்பும் மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.

கும்பம்:  சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள்.

மீனம்: செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், முடிவுகளும் கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link