ராம் சரண், கியாரா அத்வானி நடிக்கும் ஷங்கரின் #RC15 படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
இயக்குனர் வெளியிட்ட போஸ்டரில், ஷங்கர், ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி தவிர, தில் ராஜு, சுனில், அஞ்சலி, நவீன் சந்திரா, ஜெயராம் மற்றும் பலரைக் காண முடிகிறது. தமன் எஸ், ஜானி மாஸ்டர் மற்றும் மற்றவர்களும் படக்குழுவில் இருப்பதைக் காண முடிகிறது. எஸ் திருநாவுக்கரசு, சாய் மாதவ் புர்ரா, ஹர்ஷித் ரெட்டி, ராமகிருஷ்ணா, மோனிகா நிகோட்ரே, ராமஜோகய்யா சாஸ்திரி, அனந்த ஸ்ரீராம் மற்றும் நரசிம்மராவ் ஆகியோரும் படக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த படத்தின் முஹூர்த்த பூஜை புதன்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுளி தவிர மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போஸ்டரில், ஷங்கர், ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி தவிர, தில் ராஜு, சுனில், அஞ்சலி, நவீன் சந்திரா, ஜெயராம் மற்றும் பலரைக் காண முடிகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி ‘ஆக்ஷன்’ என்று கூறி படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
புதன்கிழமை அதிகாலை ஒரு கான்செப்ட் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை அதன் மூலம் அறிமுகம் செய்துள்ளார்.