இதற்காக தான் லியோ ஆடியோ லான்ச் நடைபெறவில்லை! பரபரப்பு தகவல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் செப்டம்பர் 30ம் தேதி லியோ ஆடியோ லான்ச் நடைபெற உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தற்போது ஆடியோ லான்ச் நடைபெறாது என்று படக்குழு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.
ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் அதிகப்படியான டிக்கெட் பிரஷர் காரணமாக ஆடியோ லான்ச் நடைபெறவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.
சிலர் லியோ படத்தின் ஆடியோ லான்ச் பாஸ் போலவே போலியாக அச்சடித்து விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது, இதனாலும் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது.
விஜய் ரசிகர்கள், ஆளும் திமுக அரசு தான் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடந்த அனுமதி தரவில்லை என்று X தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.