காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!
காதலர்கள் பிரிந்து போவதற்கும், காதல் முறிவிற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
எந்த உறவிலும் சண்டை மற்றும் விவாதங்கள் வருவது சகஜம். அப்படி வரும் விவாதங்களையும் சண்டையையும் முழுமையாக பேசி முடிக்க வேண்டும். இதை அப்படியே பேசாமல் விட்டுவிடுவதால், ஒரு கட்டத்தில் அது பெரிதாக முடிந்து விடும்.
நம்பிக்கை என்பது, அனைத்து உறவுகளிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அது ஒரு கட்டத்தில் உடையும் போது, அந்த உறவிலும் முறிவு ஏற்படலாம். காதலில் எது உடைந்தாலும் ஒட்ட வைத்து விடலாம். ஆனால், நம்பிக்கையை மட்டும் ஒட்ட வைக்க முடியாது.
காதல் மனதை பொறுத்ததுதான் என்றாலும், அதில் உடல் ரீதியான ஈர்ப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. உடல் ரீதியான ஈர்ப்பு குறையும் போதும் பிரேக்-அப் ஆகலாம்.
சிலர், மிக இளம் வயதிலேயே ஒரு காதல் உறவில் இருந்திருப்பர். ஆனால், வளர வளர அவர்கள் ஒரு தனி மனிதராகவும் அவர்களின் குணாதிசயமும் மாறும். இதனாலும், ஒரு காதல் உறவு முடிவு பெறலாம்.
காதல் உறவில் இருப்பவர்களுக்கு, தனக்கு ஏற்றவர் இப்படி இருப்பார், அப்படி இருப்பார் என்று மனக்கோட்டை கட்டி வைத்திருப்பர். ஆனால், அவர்கள் உண்மையில் அப்படிப்பட்ட நபர் இல்லை எனும் போதும், ஒருவரின் எதிர்பார்ப்புகளை இன்னொருவர் முழுமை படுத்தாத போதும் காதலில் பிளவு ஏற்படலாம்.
எந்த உறவிலும், இரு பக்கமும் சரியான பேச்சு வார்த்தைகள் இருப்பது மிகவும் அவசியமாகும். ஒரு சில உறவுகளி, சண்டையினால் அல்லது தவறான புரிதலால் இருவரும் பேசிக்கொள்ளாத நிலை ஏற்படலாம். இதை சரிசெய்யவில்லை என்றால் அந்த உறவு ஒரு நாள் முடிந்து விடும்.
ஒரு சிலருக்கு தான் காதல் உறவில் இருக்கும் போதே, இன்னொருவர் மீது காதல் வரலாம். அல்லது, காதலில் இருக்கும் பிரச்சனைகளை தாண்டி வேறு ஏதேனும் பெரிதாக ஒரு பிரச்சனை இருக்கலாம். இதனாலும் காதல் உறவில் சண்டைகள் வந்த அந்த உறவு பிளவுபடலாம்.