New Records: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனைகளின் புதிய சாதனைகள்
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா ஒரு சதத்தை விளாசினர்...
மிதாலி ராஜ் - பெண்கள் உலகக் கோப்பையில் கேப்டனாக அதிக போட்டிகள் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பெலிண்டா கிளார்க்கின் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ். மிதாலி இப்போது பெண்கள் உலகக் கோப்பையில் மொத்தம் 14 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். (Photograph:AFP)
ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா - பெண்கள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக பார்ட்னர்ஷிப் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா - பெண்கள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக முறை பார்ட்னர்ஷிப் சேர்ந்து விளையாடிய சாதனையை படைத்துள்ளனர் (Photograph:AFP)
ஜூலன் கோஸ்வாமி - பெண்கள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற வரலாற்றை உருவாக்கினார். ஜூலன் கோஸ்வாமி, தனது 40வது விக்கெட்டு மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லின் ஃபுல்ஸ்டனின் சாதனையை முறியடித்து, மகளிர் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார். (Photograph:AFP)
ஹர்மன்பிரீத் கவுர் - பெண்கள் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர்
பெண்கள் உலகக் கோப்பை 2022 இல் சனிக்கிழமையன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றொரு மைல்கல்லை எட்டினார், 20 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். ஹர்மன்ப்ரீத் கவுர். ஸ்மிருதி மந்தனா ஏழு சிக்ஸர்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். (Photograph:AFP)
ஹர்மன்ப்ரீத் கவுர் - பெண்கள் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த இந்தியர் ஹர்மன்பிரீத் கவுர் 109 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார். மகளிர் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளில் ஹர்மன்ப்ரீத் மூன்று சதங்கள் அடித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் தலா இரண்டு சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். (Photograph:AFP)