ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் 5 சாதனைகள்

Mon, 16 May 2022-11:29 am,

ஆன்ட்ரூ சைமண்ட்ஸ், அதிக தனிநபர் ஸ்கோரை அடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 143 ரன்கள் எடுத்தார். சைமண்ட்ஸ் 18 பவுண்டரிகளை விளாசியுள்ளார். (Photograph:AFP)

ODIகளில் 1000 ரன்களுக்கு மேல் மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இடம்பெற்றுள்ளார். சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 198 ஒருநாள் போட்டிகளில் 5088 ரன்கள் குவித்து 133 விக்கெட்டுகளை வீழ்த்தினார். (Photograph:AFP)

ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் ஒரு சர்வதேச ஒருநாள் தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 250 ரன்கள் எடுத்த ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 2006-07 இல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான VB தொடரில் முன்னாள் ஆஸ்திரேயா ஆல்ரவுண்டர் 389 ரன்கள் எடுத்தார், அதோடு 11 விக்கெட்டுகளையும் எடுத்தார். (Photograph:AFP)

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் நான்கு கேட்ச்களை கைப்பற்றினார். ஒருநாள் போட்டியில் 5 கேட்சுகளை எடுத்த ஒரே வீரர் ஜான்டி ரோட்ஸ் மட்டுமே. (Photograph:AFP)

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் கீழ் ஆஸ்திரேலியாவுக்காக உலகக் கோப்பை வென்ற அணியின் ஒரு பகுதியாக இருந்தார். பாண்டிங்கின் கீழ் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியபோது, அதில் சைமண்ட்ஸ் முக்கிய பங்கு வகித்தார். இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற சில வீரர்களில் இவரும் ஒருவர். (Photograph:AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link