இணையத்தில் கசிந்த Redmi K60 மாடல்! அப்படி என்ன சிறப்பம்சம்?
Redmi K60, Redmi K60 Pro மற்றும் Redmi K60E சாதனங்கள் முறையே சாக்ரடீஸ், மாண்ட்ரியன் மற்றும் ரெம்ப்ராண்ட் என்ற பெரியில் வெளியாக உள்ளன.
Redmi K60 ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 மூலம் இயக்கப்படும், Redmi K60 Pro ஸ்னாப்ட்ராகன் 8+ ஜென் 1 SoC மூலம் இயக்கப்படும் மற்றும் Redmi K60E ஆனது மீடியா டெக் சிப்செட்டைக் கொண்டிருக்கும்.
Redmi K60 6.67-இன்ச் டிஸ்ப்ளேவுடன் 2கே ரிசொல்யூஷனை கொண்டுள்ளது மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் உடன் 5,500 mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் Redmi K50i அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது மீடியா டெக் டிமென்சிட்டி 8100 SoC மூலம் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் இயங்குகிறது.