திருமண வாழ்க்கையே பிரச்னையா இருக்கா? தீர்வு காண இந்த 7 விஷயங்களை செய்யுங்க!

Fri, 09 Aug 2024-3:16 pm,
Relationship Tips

1. உரையாடல்: திருமண உறவில் உரையாடல் என்பது மிக முக்கியமானது. உங்களின் அலுவலகத்தில் நடப்பது, உங்களின் பிரச்னைகள், கொண்டாட்டங்கள் அனைத்து விஷயங்கள் குறித்தும் தம்பதியர் உரையாடுவது ஆரோக்கியமானதாகும். கணவன் - மனைவி வெளிப்படையாக பேசுவதால் தவறான புரிதல் ஏற்படாது. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உரையாடுவதற்காக ஒதுக்குங்கள்.

 

Relationship Tips

2. நேரம் செலவிடுங்கள்: திருமண உறவை வலுப்படுத்த வேண்டும் என்றால் உங்களின் இணையர் உடன் அதிகம் நேரம் செலவிட வேண்டும். வார விடுமுறையில் படத்திற்கு போவது, வீட்டு சமையலில் பங்கு கொள்வது, பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட விஷயங்களை செய்து இணையருடன் நேரத்தை செலவிடலாம். 

 

Relationship Tips

3. ஊக்கப்படுத்துங்கள்: உங்கள் இணையரின் சிறு சிறு விஷயங்களையும் பாராட்டுங்கள். உங்கள் கணவன் சுமாராக இரவு உணவு சமைத்தாலும், அவரது ஆர்வத்தை ஊக்கப்படுத்துங்கள். வெற்றியிலும், தோல்வியும் இணையரை ஊக்கப்படுத்துங்கள். உங்களின் ஊக்கம் இணையருக்கு பெரும் பலத்தை அளிக்கும் என்பதையும் மறக்க வேண்டாம். 

 

4. மரியாதை முக்கியம்: திருமண உறவில் இருவரும் பரஸ்பரம் மரியாதை கொடுப்பதும் அவசியமானது. உங்கள் இணையரின் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு, ஆசைகளுக்கு மரியாதை அளிப்பதன் மூலம் அவர்களுக்கே மரியாதை அளிப்பது போலாகும். மற்றொருவரின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது, அதற்கு மதிப்பளிக்க வேண்டும். 

 

5. சண்டைகளை பெரிதாக்காதீர்கள்: சிறு சிறு சண்டைகள் திருமணத்தில் இயல்பானவை. அவற்றுக்கு தீர்வு காண்பதே ஆரோக்கியமானது. அவற்றை உங்களின் தனிப்பட்ட ஈகோ காரணமாக வளர்த்துக்கொண்டே செல்வது உறவில் கசப்பை ஏற்படுத்தும்.  எனவே, ஈகோவை தவிர்த்து அதற்கான தீர்வை நோக்கி நகருங்கள். 

 

6. சர்ஃப்ரைஸ்: சர்ஃப்ரைஸ் கொடுப்பது என்றால் உடனே ஆரம்பரமான சிந்தனைக்குச் செல்லாதீர்கள். உங்கள் மனைவி புரோட்டா பிரியர் என்றால், அன்று இரவு அவருக்கு தெரியாமல் அவருக்கு பிடித்த கடையில் இருந்து புரோட்டா வாங்கிக் கொடுப்பது கூட நல்ல சர்ஃப்ரைஸ்தான். திருமண வாழ்வில் மேஜிக் இருந்துக்கொண்டே இருக்க இதுபோன்ற சிறு சிறு சர்ஃப்ரைஸ்கள் நிச்சயம் தேவை. 

 

7. நீங்களும் முக்கியம்: விட்டுக்கொடுத்து போவது திருமணத்தில் நல்லது என்பதை பெரியோர் சொல்லி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், உங்களின் நலமும் முக்கியம் என்பதை முதலில் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான தேவையையும், அடிப்படை விஷயங்களையும் பூர்த்தி செய்துகொள்வதும் உறவில் முக்கியம்.

 

பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களும் பொதுவான தகவல்கள் அடிப்படையிலானது. எனவே, திருமண உறவில் பிரச்னை ஏற்பட்டால் வல்லுநர்களின் உதவியை நாடி, அவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. இவற்றை Zee News உறுதிப்படுத்தவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link