Year Ender 2021: என்றும் தொடரும் முடிவிலி காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு

Tue, 07 Dec 2021-2:21 pm,

உலகம் முழுவதும் ஏறக்குறைய எட்டு பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் இறந்தனர். பல ஏழை நாடுகளில் தடுப்பூசிகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

ஆகஸ்ட் 15 அன்று, அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் பின்வாங்கிய பிறகு, தலிபான்கள் காபூலில் நுழைந்தனர். அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணியின் கீழ் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான் ஆப்கானை ஆக்ரமித்தது  

மியான்மர் நாட்டின் தலைவி ஆங் சான் சூகி ஆட்சிக் கவிழ்ப்பில் கைது செய்யப்பட்டார். அந்நாட்டின் ஜனநாயகம் முடிவுக்கு வந்த பிறகு, வெகுஜனப் போராட்டங்கள் நடந்தன. ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான இந்த வெகுஜன எதிர்ப்புக்கள் வன்முறைக் கரம் கொண்டு அடக்கப்பட்டதில், 1,200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மாலி, துனிசியா, கினியா என பல நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளும், ஆக்ரமிப்புகளும் தொடர்ந்தன

உலகெங்கிலும் தீவிர காலநிலை நிகழ்வுகள் அச்சுறுத்துகின்றன. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பேரழிவுகரமான வெள்ளம் முதல் அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் அல்ஜீரியாவில் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ என்றால், மேற்கு கனடாவில் ஜூன் மாதம் அனலாய் தகிக்கிறது.  

நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டில், கிட்டத்தட்ட 200 நாடுகள் புவி வெப்பமடைதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன. இருந்தபோதிலும், ஆபத்தான வெப்பநிலை அதிகரிப்பை மெதுவாக்குவதற்குத் தேவையானதை உறுதிமொழிகள் பூர்த்தி செய்யவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு தாக்குதலில், ஜனவரி 6 அன்று, டொனால்ட் டிரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அமெரிக்க நடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனின் வெற்றியை உறுதிப்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியான இது, உலகம் முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கிரெம்ளினின் மிக முக்கியமான விமர்சகர்களில் ஒருவரான அலெக்ஸி நவல்னி, ஜெர்மனியில் நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு மாஸ்கோவுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்டார், விளாடிமிர் புடின் மீது குற்றம் சாட்டிய நவல்னி, மோசடி குற்றச்சாட்டுகளுக்காக இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.  அக்டோபரில், அவருக்கு மனித உரிமைகளுக்கான 2021 சாகரோவ் பரிசு வழங்கப்பட்டது.

(புகைப்படம்: AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link