உயிர் விலைமதிப்பற்றது... கார் வாங்கும் போது இதெல்லாம் இருக்கான்னு செக் பண்ணுங்க
வாகனங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், தினமும் செய்திகளில் சாலை விபத்துக்கள் பற்றிய செய்திகளை படிக்கிறோம். சாலை விபத்துகளில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நம் உயிர் விலைமதிப்பற்றது என்பதை நாம் உணர வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி, வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதோடு, நம் வாகனத்தில் அனைத்துவித பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்னும் ஏ பி எஸ் இன்றைய கார்களில், இருக்கும் அத்தியாவசியமான அம்சமாக இது மாறிவிட்டது. அவசர காலத்தின் போது, சக்கரங்கள் பாதுகாப்பாக இயங்கவும், பிரேக் செய்யும்போது வண்டி பாதுகாப்பாக நிற்கவும் உதவுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் என்னும் ESC பிரேக்குகள் மற்றும் எஞ்சின் ஆற்றலை சீராக வைத்திருக்கும். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை மீறி செல்வது தடுக்கப்படுகிறது.
ஏர்பேக்கள் விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்பை காக்கும் சிறந்த கவசங்கள். விபத்தின் போது காற்று பைகள் விரிவடைந்து பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சீட் பெல்ட்: சீட் பெடல்ட் இல்லாமல் கார்கள் வருஅதில்லை. எனினும் காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது மிகவும் முக்கியம். சீட்டு பெல்ட்டுகள் அணிந்தால் தான் ஏர்பேக் என்னும் காற்றுப்பை வேலை செய்வோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ISOFIX குழந்தை இருக்கை ஆங்கர்கள்: குழந்தைகள் அமர்திருக்கும் இருக்கைகளை பாதுகாப்பாக இணைக்கும் இந்த அம்சம், பயணம் செய்யும் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பை வழங்குகின்றன.