ஆழமான காதலை அழகாக காட்டிய கதை..‘பிரேமம்’ படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு..!
நிவின் பாலியை ஜார்ஜ் டேவிட்டாக பார்த்த படம், பிரேமம்
மலையாளத்தில் வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் ஒரு மனிதனின் மூன்று பருவத்தில் வரும் காதல் காட்டப்பட்டிருக்கும்.
அனுபம பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா சபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருப்பர்.
மலையாளத்தில் வெளியான மிக சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் பார்க்கப்பட்டது.
இதில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவியை இன்றளவும் ரசிகர்கள் அன்பாக அந்த பெயரிலேயே அழைத்து வருகின்றனர்.
இந்த படம், இதில் நடித்திருந்த அனைவருக்கும் திருப்பு முனையாக அமைந்தது.
குறிப்பாக சாய் பல்லவிக்கு இந்த படத்திற்கு பிறகுதான் பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்கள் #8YearsofPremam ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.