செவ்வாய் கிரகத்தில் புதைந்துள்ள ரகசியத்தை வெளிப்படுத்தும் ஏரி: NASA அளிக்கும் பகீர் தகவல்
அமெரிக்க விண்வெளி ஏஜென்சி நாசா நீண்ட காலமாக செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. தென்மேற்கு துருக்கியில் உள்ள ஒரு ஏரியிலிருந்து கிடைக்கும் தரவைப் பயன்படுத்தி இதனை கண்டறியலாம் என நாசா தகவலை வெளியிட்டுள்ளது.சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் பாறைகள் செவ்வாய் கிரகத்தின் ஜசீரோ பள்ளத்தில் (Jezero Crater) உள்ளதைப் போன்றவை என நாசா கூறுகிறது
துருக்கியின் சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் கற்கள் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ பள்ளத்திற்கு (Jezero Crater) அருகில் காணப்படும் பாறைகளுக்கு மிகவும் ஒத்தவை என நாசா கூறுகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள Jezero Crater என்பது நாசாவின் Perseverance Rover என்னும் ரோவர் தரையிறக்கிய இடமாகும். முன்பு ஜசீரோ பள்ளத்தில் நிறைய தண்ணீர் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது மட்டுமல்ல, இந்த பகுதி செவ்வாய் கிரகத்தின் மிகவும் ஆபத்தான பகுதி எனவும் கூறப்படுகிறது
நுண்ணுயிரிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஏரியைச் சுற்றியுள்ள பெரிய குன்றுகள் காணாமல் போயுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகளின் குழு, ரோவரின் செயல்பாட்டைக் கவனித்து, கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. ஜீசீரோ பள்ளத்தில் உயிர்கள் இருக்கிறதா? என கண்டறிய சால்டா ஏரியின் கரையில் காணப்படும் கனிமங்களையும் வண்டலையும் விஞ்ஞானிகள் ஒப்பிடுகின்றனர். உயிர்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கிடைத்தால், நாங்கள் மீண்டும் சால்டா ஏரிக்குச் சென்று ஆய்வு செய்வோம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சால்டா ஏரியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் பண்டைய காலங்களில் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததா என்பதை புரிந்துகொள்ள உதவும். நாசா அதிகாரி தாமஸ் சுர்பூச்சென், சால்டா ஏரி மூலம், செவ்வாய் கிரகத்தின் உயிரியல் ஆதாரத்துடன், அங்குள்ள வளிமண்டலத்தையும் புரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
அமெரிக்காவிலும் துருக்கியிலும் உள்ள விஞ்ஞானிகள் சால்டா ஏரியின் சில பகுதிகள் குறித்து 2019 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி செய்தனர். சால்டா ஏரியில் உள்ள நீல நீர் மற்றும் வெள்ளை கரைகள் காரணமாக துருக்கியின் மாலத்தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளை மட்டுமே ஈர்க்கிறது. இந்த ஏரி விஞ்ஞானிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகிவிட்டது.
விஞ்ஞானிகள் இப்போது சால்டா ஏரியின் வண்டலில் காணப்படும் கார்பனேட் தாதுக்களை செவ்வாய் கிரகத்தில் காணப்படும் கற்களுடன் ஒப்பிடுவார்கள். சால்டா ஏரி நுண்ணுயிரிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டது, பெரிய அளவிலான மேடுகள் அழிந்து விட்டது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதே நிலைமை செவ்வாய் கிரகத்தின் ஜசீரோ பள்ளத்திலும் உள்ளது.
சால்டா ஏரியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து விஞ்ஞானிகள் முக்கிய தகவல்களை பெறலாம்.