Lottery சீட்டுக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்

Wed, 24 Mar 2021-9:51 pm,

லாட்டரி வணிகம் நேர்மையை சார்ந்தது. நேர்மையை இழந்தால், யார் எங்களை நம்புவார்கள்? என்று கேட்கிறார் ஸ்மிஜா. ஆலுவாவில் வசிக்கும் லாட்டரி டிக்கெட் விற்பனையாளர் ஸ்மிஜாவின் நேர்மை   சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த நேர்மையின் காரணமாக, ஒருவருக்கு லாட்டரியில் 6 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. அவர் நினைத்திருந்தால், அந்த லாட்டரி சீட்டை தனது பெயரில் வைத்துக் கொண்டு அவரே ஆறு கோடி ரூபாய்க்கும் அதிபாதியாகியிருக்கலாம். இந்த நேர்மை இன்று யாரிடம் இருக்கும்?

கேரளாவில் ஒரு பெண் லாட்டரி விற்பனையாளரின் நேர்மை குறித்து பரவலாக பேசப்படுகிறது. தொலைபேசியில் பேசிய ஒரு நபருக்கு லாட்டரி சீட்டு முகவராக இருக்கும் ஸ்மிஜா என்ற பெண் டிக்கெட் ஒன்றை விற்றார். அதற்கு 200 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்த நபர் பரிசுத்தொகை விழுந்த அறிவிப்பு வரும்வரை லாட்டரி சீட்டுக்கான விலையைக் கொடுக்கவில்லை, டிக்கெட்டும் ஸ்மிஜாவிடமே இருந்தது. லாட்டரியில் பரிசு விழுந்ததும், அதன் உரிமையாளரிடம் கொண்டு வந்தது லாட்டரி சீட்டை கொடுத்த ஸ்மிஜா, பரிசு பணத்தைப் பெறவும் உதவினார்.

ஆலுவா அருகே வசிக்கும் பி.கே.சந்திரன், கோடைகால பம்பர் லாட்டரியை வென்றுள்ளார். டிக்கெட்டை விற்கும் பெண் முகவரிடம் தொலைபேசியில் 6142 எண்ணிற்கான டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். லாட்டரி சீட்டுக்கான பணத்தை பிறகு கொடுப்பதாகவும் சொன்னார்.  பின்னர் அவர் பணம் கொடுப்பார். பி.கே.சந்திரன் தொலைபேசியில் நிறுத்திய டிக்கெட்டின் எண் SD-316142 அதே எண்ணிற்கான டிக்கெட்டை ஸ்மிஜா கே மோகன் என்ற முகவரிடமிருந்து வாங்கினார். ஸ்மிஜாவிடம்  12 டிக்கெட்டுகள் எஞ்சியிருந்தன. இந்த சூழ்நிலையில், ஸ்மிஜா பரிசு விழுகாத டிக்கெட்டைக்கூட சந்திரனுக்கு கொடுத்திருக்கலாம். இந்த நிதர்சனமே ஸ்மிஜாவின் நேர்மைக்கு சாட்சியாக உள்ளது  

ஸ்மிஜாவே சந்திரனை அழைத்து, அவருக்காக எடுத்து வைத்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததை தெரிவித்தார். பின்னர், ஸ்மிஜா சந்திரனின் வீட்டிற்கு சென்று டிக்கெட்டை சந்திரனிடம் கொடுத்துவிட்டு, லாட்டரி சீட்டுக்கு உரிய 200 ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டார். இது அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது

லாட்டரி சீட்டு வாங்குவது சந்திரனுக்கு பழக்கம் என்றாலும், அதில் சிறிய அளவில் பரிசுத்தொகை கிடைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.  இப்போது ஸ்மிஜாவின் நேர்மையின் காரணமாக சந்திரனுக்கு 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தனது வாழ்க்கையையே மாற்றிய பெண்ணுக்கு சந்திரன் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பதாக நெகிழ்கிறார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link