தண்ணீருக்குள் கதக்களி ஆடும் வாட்டர் ப்ரூப் ஸ்மார்ட்போன்கள்

Wed, 13 Jul 2022-9:32 pm,

Samsung Galaxy S21 Ultra: S21 தொடரின் பிரீமியம் போன்களில் ஒன்றாகும். இது சிறந்த செயலி மற்றும் விவரக்குறிப்புகளுடன் கூடிய அலுமினிய கவருடன் வரும் ஸ்மார்ட்போன். இருபுறமும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. IP68 தரப்படுத்தப்பட்ட நீர் மற்றும் தூசி எதிர்ப்புடன் வரும் இந்த ஃபோனை நீருக்கடியிலும் எளிதாகப் பயன்படுத்தலாம். 5G ஆதரவு மற்றும் 108MP பீஸ்ட் கேமராவுடன் கூடிய 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.80,000 ஆகும்.

OnePlus 9 Pro: தூசி மற்றும் நீர் எதிர்ப்பைக் கொண்ட OnePlus-ன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன். இது IP68 மதிப்பீட்டுடன் வருகிறது. இது நீருக்கடியில் கூட ஃபிளாக்ஷிப் போனை நீங்கள் பயன்படுத்த முடியும். இந்த போன் அற்புதமான 120Hz Fluid2 AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 888 செயலியுடன் வருகிறது. இந்த போன் 256GB UFS 3.1 சேமிப்பு மற்றும் 12GB RAM உடன் வருகிறது. ரூ.65,000 -க்கு வாங்கலாம்.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்: இந்தியாவின் சிறந்த வாட்டர் ப்ரூப் போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போன் IP68 உடன் வருகிறது. இந்த மொபைலை நீருக்கடியில் அதிகபட்சம் 20 அடி (6 மீட்டர்) வரை 30 நிமிடங்களுக்கு வைக்கலாம். அதன் ப்ரோ 12எம்பி கேமரா அமைப்பு (அல்ட்ரா வைட், வைட் மற்றும் டெலிஃபோட்டோ) மூலம் நீருக்கடியில் புகைப்படம் எடுக்கலாம். கூடுதலாக, இது 6ஜிபி ரேம் கொண்ட வேகமான ஆப்பிள் ஏ15 பயோனிக் செயலியை உங்களுக்கு வழங்குகிறது. ஆப்பிள் 2778 x 1284 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.7 இன்ச் HDR10 டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

கூகுள் பிக்சல் 6 ப்ரோ: இந்த ஸ்மார்ட்போனை அதிகபட்சம் 30 நிமிடங்களுக்கு 1.5 மீட்டர் வரை தண்ணீரில் மூழ்க வைக்கலாம். அதிநவீன ஆக்டா கோர் செயலி உள்ளது. சிறிய வடிவமைப்பு மற்றும் நீர்ப்புகா திறன் ஆகியவற்றின் சிறந்த கலவையாகும். இந்தியாவில் தற்போது கிடைக்கும் சிறந்த வாட்டர் ப்ரூஃப் மொபைல்களில் இதுவும் ஒன்று. அமேசானில் இருந்து 1,19,900 ரூபாய்க்கு வாங்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link