SANDES: Whatsapp உடன் போட்டியிடும் இந்திய அரசின் உள்நாட்டு செயலியின் சிறப்பம்சங்கள்
இந்த புதிய செயலியை gims.gov.in என்ற வலைதளம் மூலமாக அணுகலாம். தற்போது, பொதுமக்கள் பயன்பாட்டிர்கு இது அனுமதிக்கப்படவில்லை. இந்த தளத்தில் யாராவது கிளிக் செய்தால், 'அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு இந்த அங்கீகார முறை பொருந்தும்' என்ற செய்தியை அவர் காணலாம்.
தரவு திருட்டு மற்றும் தனியுரிமை குறித்து எழுந்த கவலைகளுக்கு மத்தியில் மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. Sandes ஒரு உடனடி செய்தியிடல் செயலி. தற்போது அரசாங்க ஊழியர்கள் மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது அரசு உடனடி செய்தி சிஸ்டம் GIMS (Government Instant Messaging Systam) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த செயலிஅட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் இயங்குகிறது. அட்ராய்டு மற்றும் iOS இயக்க முறைமைகளின் ஆதரவுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி, புதிய நவீன உரையாடல் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ சாட்டிங்கும் செய்யலாம்
கடந்த சில ஆண்டுகளில் தரவு திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அனைத்து இணைய நிறுவனங்களும் தங்கள் சேவையகங்களை இந்தியாவில் அமைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது. ஆனால் எந்தவொரு இணைய நிறுவனமும் இதுவரை எந்தவொரு உறுதியான முடிவையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு வருடத்தில், மத்திய அரசு தரவு பாதுகாப்பு தொடர்பான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.