சனி பெயர்ச்சி ஆன அந்த நொடியில் 3 ராசிகளின் வாழ்க்கை மாறப்போகுது..!
2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. இத்துடன் 2025ஆம் ஆண்டு புதிய ஆண்டு வரவுள்ளது. பல கிரகங்கள் புத்தாண்டில் பெயர்ச்சி ஆக போகின்றன. குறிப்பாக சனி பெயர்ச்சி (Sani peyarchi) நடக்க இருக்கிறது.
சனி கிரகம் மட்டுமே இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகும். அந்தவகையில், 29 மார்ச் 2025 அன்று சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இப்போது கும்ப ராசியிலிருக்கும் சனி வியாழனின் ராசியான மீன ராசிக்குள் நுழைகிறார்.
இரண்டரை வருடங்கள் இந்த ராசியில் இருப்பார்கள். இதன் பிறகு மேஷ ராசிக்கு செல்லும். மீனத்தில் சனியின் சஞ்சாரம் அனைத்து ராசிகளையும் பாதிக்கப் போகிறது. ஆனால் அதன் பலன் அதிகபட்சமாக 3 ராசிக்காரர்களுக்குத்தான் இருக்கும். எந்தெந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் மீது சனியின் அருள் பொழியப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம் : இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11வது வீட்டில் சனி சஞ்சரிப்பார். இது உங்களை நிதி ரீதியாக பலப்படுத்த உதவும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்களின் வேலைகள் முடிவடையும். இதுவரை நீங்கள் செய்த கடின உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது. பணியிடத்தில் உங்கள் சிறந்த செயல்திறனைக் கொடுப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம் : இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த ராசி மாற்றத்தால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். அடுத்த வருடமும் புதிய சொத்து வாங்கலாம். உங்கள் குடும்பத்தில் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.
மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், இதன் காரணமாக உங்கள் பழைய கடன்களை நீங்கள் திருப்பிச் செலுத்த முடியும். பழைய முதலீட்டின் மூலம் எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறலாம். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் புதிய திட்டத்தில் நீங்கள் முன்னேறலாம்.