கும்பத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே..!
)
கும்ப ராசியில் உள்ள சனி பகவான், ஜூன் 30-ம் தேதி வக்ர நிலை அடைகிறார். சனி அடுத்த வருடம் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாற உள்ள நிலையில், நவம்பர் 15, 2024 வரை சனி கும்பத்தில் வக்ர நிலையிலேயே நீடிப்பார். இதனால், மேஷம், மகரம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்களை வழங்குவார்.
)
சனியின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் பொருள் மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். உங்கள் பதவி உயர்வு குறித்த நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் நண்பர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். குடும்பத்தில் சில நல்ல செய்திகள் வந்து சேரும்.
)
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, சனியின் வக்ர பெயர்ச்சி வியாபாரத்தில் வெற்றியைத் தரும். கைக்கு வராமல் தடைப்பட்ட பணம் திடீரென்று கிடைக்கும். சமீபத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான நல்ல செய்தியும் வரலாம். உங்கள் நிதி நிலை மேம்படும். உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மகர ராசிக்காரர்கள் தங்கள், வேலையில், தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். முதலீடு செய்த பணம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். உங்கள் வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும் மற்றும் செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பணியிடத்தில் அதிக முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில், சனி அபரிமிதமான பலன்களை வழங்குவார். நன்றாக சம்பாதிப்பீர்கள். இந்த நேரத்தில் தொழில் தொடர்பான முடிவுகளை கவனமாக எடுங்கள். பணத்தை சேமிப்பதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் வணிகம் மிகப்பெரிய அளவில் வளரும். குடும்ப உறுப்பினர்களின் அனைத்து உதவிகளையும் பெறுவீர்கள். உங்களின் வேலையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட நல்ல வாய்ப்புகள் உள்ளன. உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும்.
மீன ராசிக்காரர்களின் வாழ்வில் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, நல்ல வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன. உங்கள் காதல் உறவுகளில் இனிமை அதிகரிக்கும் . குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல இணக்கம் இருக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள புத்திசாலியான நபர் உங்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்குவார். இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளும் வரலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.