துலீப் டிராபி தொடரில் ஒருவழியா அறிமுகமான சஞ்சு, முதல் போட்டியில் அசத்தல் கேட்ச்
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிகமாக புறக்கணிக்கப்படும் ஒரு பிளேயர் என்றால் அது சஞ்சு சாம்சன் தான். எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பத்தில்லை.
ஒரு சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து சொதப்பினால் உடனடியாக அணியில் இருந்து வெளியேற்றம் தான். ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், இஷான் கிஷன் போன்ற பிளேயர் பல போட்டிகளில் சொதப்பினாலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
இத்தனைக்கும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சஞ்சு சாம்சன். இருந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பதே இல்லை.
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியிலும் ரிசர்வ் பிளேயராகவே சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். அதுமுடிந்த கையோடு இலங்கை சென்ற இந்திய அணயிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
குறைந்தபட்சம் துலீப் டிராபி தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால் முதலில் அறிவிக்கப்பட்ட இந்தியா ஏ, பி, சி, டி என நான்கு அணிகளிலும் சாம்சன் பெயர் இல்லை. பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டி அணியில் சேர்க்கப்பட்டார்.
அதிலும் முதல் போட்டியில் களமிறங்க வாய்ப்பு கொடுக்கவில்லை. சாம்சனைவிட ஜூனியர் பிளேயர்கள் எல்லாம் இந்த போட்டியில் களமிறங்கி ஆடினர். இதனால் இந்தியா டி அணி முதல் போட்டியில் தோற்றது.
இதனையடுத்து இந்தியா ஏ அணிக்கு எதிராக ஆனந்தபூரில் இரண்டாவது போட்டியில் இந்தியா டி அணி களமிறங்கியுள்ளது. அதில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை சேர்த்துள்ளார். அதில் மயங்க் அகர்வால் கேட்சை அற்புதமாக பிடித்து அசத்தினார்.
இத்தனை ஆண்டுகளாக இந்திய அணிக்கு கிரிக்கெட் ஆடும் சஞ்சு சாம்சனுக்கு இதுதான் முதல் துலீப் டிராபி தொடர். ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பல சாதனைகள் படைத்திருக்கும் சஞ்சு சாம்சன், தொடர்ச்சியாக வாய்ப்புகளை போராடியே பெற்றுக்கொண்டிருக்கிறார். ஆனந்தபூரில் களமிறங்கிய அவருக்கு ரசிகர்கள் கைதட்டி ஆதரவை தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.