IND vs ENG: சதம் அடித்தும் கொண்டாடாத ஜடேஜா... எல்லாம் சர்ஃபராஸ் கானுக்காக... என்ன காரணம்?

Thu, 15 Feb 2024-5:14 pm,

நான்கு மாற்றங்கள்: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அக்சர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், கேஸ் பரத், முகேஷ் குமார் ஆகியோருக்கு பதில் சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், சிராஜ், ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

 

சொதப்பல் தொடக்கம்: இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் கடுமையாக திணறியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, சுப்மான் கில் 0, ரஜத் பட்டிதார் 5 ரன்களை எடுத்து வெளியேறினர். 

 

ரோஹித் - ஜடேஜா ஜோடி: விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த போது, ஜடேஜாவுடன் சேர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா உடன் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த ஜோடி 234 ரன்களை குவித்தது. 

 

ரோஹித் சதம்: 157 பந்துகளில் சதம் அடித்த ரோஹித் சர்மா, 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடக்கம். 

 

சர்ஃபராஸ் கான் அதிரடி: சர்ஃபராஸ் உள்ளே வரும்போது ஜடேஜா 84 ரன்களை எடுத்திருந்தார். ஆனால், சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடி 48 பந்துகளிலேயே அரைசதம் அடித்தார். ஜடேஜா அப்போது 96 ரன்களை மட்டுமே எட்டியிருந்தார். தொடர்ந்து ரன்களை எடுத்துக்கொண்டே இருந்தார் சர்ஃபராஸ்.

 

ரன்-அவுட்: ஜடேஜா 99 ரன்களை எட்டியபோது, சதம் அடிக்க வேண்டும் என முனைப்பில் மிட்-ஆப் திசையில் அடித்து ரன் ஓட சர்ஃபராஸை அழைத்தார். சர்ஃபராஸ் கானும் ஜடேஜாவின் அழைப்புக்கு ஏற்று ஓட, ஜடேஜா திடீரென ரன் வேண்டாம் என்றார். அப்போது வுட் நேரடியாக ஸ்டிக்கில் அடிக்க, சர்ஃபராஸ் கான் ரன் அவுட்டானார். சர்ஃபராஸ் கான் 66 பந்துகளில் 62 ரன்களை எடுத்திருந்தார். அதில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடக்கம். சர்ஃபராஸ் கான் அவுட்டானதற்கு டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த ரோஹித் மிகுந்த விரக்தியடைந்தார். 

 

ஜடேஜா அதிருப்தி: சர்ஃபராஸ் கானும் களத்தில் இருந்திருந்தால் முதல் போட்டியிலேயே சதம் அடித்திருப்பார். ஆனால், தன்னால் ரன்-அவுட்டாகிவிட்டாரே என்ற சோகத்தில், சதம் அடித்தும் ஜடேஜா பெரியளவில் அதை கொண்டாடவில்லை. அவர் வழக்கம்போல் வாள் வீச்சு கொண்டாடட்த்தை செய்தாலும், அதில் பெரியளவில் மகிழ்ச்சியில்லை என்பதை நேரடியாகவே பார்க்க முடிந்தது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link