ஹஜ் உம்ரா விசாவில் மாற்றமா? 6 நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு NO Tourist VISA!
சில நாடுகளை சேர்ந்த மக்கள், சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா வருவதற்கு விசாக்களை முன்கூட்டியே வாங்கத் தேவையில்லை
சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சுற்றுலா அமைச்சகம் விசா நடைமுறையை எளிதாக்கியுள்ளது.
பயணிகளின் வசதிக்காக மற்றுமொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதில் சவுதி அரேபிய துறைமுகங்களில் இந்த விசா ஆன்லைனிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் என்னவாக இருக்கும்? இந்த கேள்விக்கான பதில் இது...
விசாவிற்கு விண்ணப்பிக்க, பயணி கால வரம்பை பின்பற்ற வேண்டும் போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். காலாவதியான பிறகு, விசா புதுப்பிக்கப்படாது
விசா காலாவதியாகும் முன் சவுதியை விட்டு வெளியேற வேண்டும்.
சவுதியில் ஹஜ் யாத்திரைக் காலத்தில் சுற்றுலா விசாவில் உம்ரா செய்ய முடியாது என்பதை சவுதி அரசு திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டது
சுற்றுலா விசா சேவைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகள்: துருக்கி, தாய்லாந்து, மொரிஷியஸ், சீஷெல்ஸ், பனாமா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
இந்த ஆறு நாடுகளின் குடியுரிமை உள்ளவர்கள் சுற்றுலா இ-விசாவிற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் அல்லது சவுதி அரேபியா வந்த பிறகும் விண்ணப்பிக்கலாம். சுற்றுலா, உம்ரா, வணிகம் மற்றும் சுற்றுலா விசாவில் தங்கள் குடும்ப நண்பர்களை சந்திக்க பயணிகளுக்கு அனுமதி உண்டு