2025ல் உங்கள் உடலை ஆரோக்கியமான எடையுடன் வைத்திருக்க இந்த 7 பழக்கங்களுக்கு குட்பை சொல்லுங்க!
உணவு:கண்டபடி உணவுகளைச் சாப்பிட்டால் உடல் ஒரு வாரத்திலே அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. தொலைக்காட்சி பார்க்கும்போது அல்லது தனியாக இருக்கும்போது ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சரியான இலக்கு: தினமும் காலை எழுந்ததும் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும். என்ன வேலைகள் நிலுவையில் உள்ளது என்று காலை எழுந்ததும் வரிசையாக யோசித்து ஒவ்வொரு செயல்களையும் செய்து முடிக்க வேண்டும். அதுபோன்று உடல் ஆரோக்கியத்திலும் இலக்கு தேவை. நீங்கள் இன்று என்ன சாப்பிட வேண்டும். என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இலக்கு அமைக்க வேண்டும்.
உடற்பயிற்சி தவிர்த்தல்:உடற்பயிற்சி என்பது ஆரோக்கிய பலன்கள் அளிக்கும் மதிப்பற்ற செயல்பாடுகள் என்றேக் கூறலாம். தினமும் காலை மற்றும் மாலை இருவேளை உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது. கார்டியோ செய்துவந்தால் உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரித்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
குறைவான தண்ணீர் குடித்தல்: தண்ணீர் உங்கள் உடலில் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஒரு மனிதர் சராசரியாகக் குறைந்தது 5 அல்லது 6 லிட்டர் தண்ணீர் தினசரி குடிக்க வேண்டும்.
உட்கார்ந்த வாழ்க்கை முறை: உட்கார்ந்த வாழ்க்கை முறை என்பது பெரும்பாலான மனிதர்கள் ஐடி ஊழியர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இதுபோன்ற உடல் எடை அதிகரிப்பைக் காணலாம். ஏனென்றால் உட்கார்ந்தபடி வேலைப் பார்ப்பதால் உடல் செயல்பாடு குறைவாக நடைபெறும் எனவே உடல் எடையும் கூடும் என்று சொல்லப்படுகிறது. மாறாக இந்த பிரச்சனையைச் சரிசெய்ய இடைவெளி நேரத்தில் அலுவலகத்தை இரண்டு முறை சிறிது நேரம் ஓய்வெடுத்துச் சுற்றிவாருங்கள் மற்றும் மின்தூக்கி பயன்படுத்துவதற்குப் பதில் படிக்கட்டு பயன்படுத்துங்கள்.
தூக்கமின்மை:நிம்மதியான தூக்கம் இல்லை என்றால் நிச்சயம் உடல் எடை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதருக்கு 7 அல்லது 8 மணி நேரம் தூக்கம் கட்டாயம் அவசியம். 5 மணி நேர தூக்கமாக இருந்தாலும் நிம்மதியாகத் தூங்க வேண்டும்.
காலை உணவு தவிர்த்தல்: பெரும்பாலான மனிதர்கள் காலை உணவைத் தவிர்க்கின்றனர். வேலைக்குச் செல்லும் நபர்கள் மற்றும் படிக்கும் மாணவர்கள் வரை காலை உணவைக் கணிசமாகக் குறைத்துவிடுகின்றனர். இதுவும் உடல் எடையை அதிகரிக்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)