எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்! இந்த அப்டேட்டை செய்ய வேண்டாம்!
எஸ்பிஐ வாடிக்கையாளரின் கணக்கு பிளாக் செய்யப்படுவதை தவிர்க்க பான் நம்பரை அப்டேட் செய்யக்கோரி போலியான செய்திகள் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
பல வாடிக்கையாளர்கள் தங்களின் YONO கணக்கு மூடப்பட்டுவிட்டதாகவும், அதை மீண்டும் செயல்படுத்த தங்கள் பான் எண்ணைப் அப்டேட் செய்ய வேண்டும் என்றும் போலிச் செய்திகளைப் பெறுவதாக புகார் அளித்துள்ளனர்.
பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) சோதனை நடத்தியத்திலிருந்து தற்போது வைரலான செய்தி போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைப் பகிர கேட்கும் மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் அப்படி செய்தி வந்தால் report.phishing@sbi.co.in என்ற முகவரியில் புகாரளியுங்கள் என்றும் பிஐபி தெரிவித்துள்ளது.
செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் ட்வீட்கள் போன்ற பல்வேறு தகவல்தொடர்பு முறைகள் மூலம் ஃபிஷிங் மூலம் மோசடிகள் குறித்து எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.